சாலையில் விரிசல்... குமுளியில் கனரக வாகனங்கள் செல்ல தடை

 
ச் ச்

தமிழக கேரளா இணைப்புச் சாலையான குமுளி மலை பாதையில் ரோட்டில் பிளவு ஏற்பட்டதால் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் தமிழகத்தையும் கேரளா மாநிலத்தையும் இணைக்க கூடிய முக்கிய சாலைகளில் குமுளி மலைச்சாலை முக்கியமான சாலையாக உள்ளது. இந்த சாலையின் வழியாக தினந்தோறும் பல ஆயிரக்கணக்கான வாகனங்கள் தமிழகத்திலிருந்து கேரளா மாநிலத்திற்கும், கேரள மாநிலத்தில் இருந்து தமிழக மாநிலத்திற்கும் வந்து செல்கின்றன மிக முக்கியமாக இரு மாநில இணைப்பு சாலையாக குமுளி மலைச்சாலை உள்ளது.

குமுளி மலைச்சாலையில் மழை காரணமாக மலை அடிவார பகுதியை சாலையில் இருந்து மூன்றாவது பென் ஸ்டாக் பைப் காலம் அருகே  செல்லும் சாலையில் ஓரமாக பிளவு ஏற்பட்டுள்ளது. இந்த பிளவின் காரணமாக மண் சரிவு ஏற்பட்டு சாலை முற்றிலும் சரிந்து விளக்கூடிய சூழ்நிலை உள்ளது. இதனால் பிளவு ஏற்பட்ட பகுதியில் காவல்துறையினர் தடுப்பு இரும்பு பேரிக்காடுகளை வைத்து வாகனங்கள் அந்த பகுதிக்கு செல்லாத வகையில் தடையினை ஏற்படுத்தி உள்ளனர். மேலும் குமுளி மலைச்சாலையில் கனரக வாகனங்கள், லோடு வாகனங்கள், சரக்கு வாகனங்கள்  செல்லுவதற்கும் காவல்துறை தடை விதித்துள்ளனர்.