#BREAKING அதி பயங்கர வெடி விபத்து... உடல் சிதறி பலி! சிவகாசியில் சோகம்
சிவகாசி விஸ்வநத்தம் கிராமத்தில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

சிவகாசி அருகே விஸ்வநத்தம் காமராஜர் நகரில் சங்கர் என்பவருக்கு சொந்தமான நடேஷ் பட்டாசு தொழிற் சாலையின் 20- அறைகளில் சுமார் 60- ஆண், பெண் தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணிகளை செய்து கொண்டிருந்தனர். இந்நிலையில் பட்டாசு மூலப் பொருள் அறையில் உராய்வு காரணமாக திடீரென வெடி விபத்து ஏற்பட்டதில் மூன்று அறைகள் தரைமட்டமானது. மற்றும் இரண்டு அறைகள் சேதமடைந்தன. சம்பவமறிந்து வந்த சிவகாசி தீயணைப்புத் துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். விபத்தில் குருநாதன் என்ற தொழிலாளி உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் பானுப்பிரியா, பூமாரி ஆகிய இரண்டு பெண் தொழிலாளிகள் பலத்த காயமடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள சிவகாசி நகர் காவல் நிலைய போலீசார் வெடி விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் விபத்துசம்பவம் நடந்த பட்டாசு தொழிற்சாலையை மாவட்ட போலீஸ் எஸ்பி ஸ்ரீநாதா, சார் ஆட்சியர் முகமது இர்பான் ஆகியோர் நேரில் ஆய்வு செய்து விபத்திற்கான காரணம் குறித்து கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டனர் .

