தீபாவளி அன்று எத்தனை மணிநேரம் பட்டாசு வெடிக்க வேண்டும்?

 
tn

தீபாவளி அன்று தமிழகத்தில் 2  மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

diwali
வருகிறேன் நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.  இதன் காரணமாக தமிழகம் முழுவதும் பட்டாசு விற்பனை களைகட்டி  உள்ளது.  இந்த சூழலில் இந்த ஆண்டு தமிழகத்தில் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்படும் என்று தமிழக  சுற்றுச்சூழல் துறை அறிவித்துள்ளது. 

tn

 தீபாவளி அன்று காலை 6 மணி முதல் ஏழு மணி வரையும்,  இரவு 7 மணி முதல் 8:00 மணி வரையும் பட்டாசு வெடிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  பசுமை பட்டாசு மட்டுமே வெடிக்க வேண்டும் என்றும் , தீபாவளி அன்று காற்றின் தரத்தை மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள் மாவட்ட வாரியாக கண்காணிப்பார்கள் என்றும் நீதிமன்றம்  தெரிவித்துள்ளது.