பட்டாசு ஆலை வெடி விபத்து - உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4ஆக உயர்வு!

 
tn

விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4ஆக உயர்ந்துள்ளது. 

Fire

விருதுநகர்‌ மாவட்டம்‌ மற்றும்‌ வட்டம்‌, வச்சக்காரபட்டி கிராமத்தில்‌ இயங்கிவந்த தனியாருக்குச்‌ சொந்தமான பட்டாசு ஆலையில்‌ கடந்த  (24-01-2024) காலை எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில்‌ விருதுநகர்‌ மாவட்டம்‌, சிவகாசி வட்டம்‌, முதலிபட்டி கிராமத்தைச்‌ சேர்ந்த திரு.வீரக்குமார்‌ (வயது 55) த/பெ.கிருஷ்ணசாமி மற்றும்‌ விருதுநகர்‌ வட்டம்‌, கன்னிசேரி புதூர்‌ கிராமத்தைச்‌ சேர்ந்த திரு.காளிராஜ்‌ (வயது 20) த/பெ.பாண்டியராஜ்‌ ஆகிய இருவரும்‌ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்‌ .ஒருவர் சிகிச்சை பலனின்றி பலியானார். 

Udupi: Several fishing boats caught fire in Gangolli

இந்நிலையில் வசக்காரப்பட்டி தாளமுத்து பட்டாசு ஆலையில் கடந்த  ஜனவரி 24ம் தேதி ஏற்பட்ட வெடி விபத்தில் இருவர் சம்பவ இடத்திலும், ஒருவர் சிகிச்சை பலனின்றியும் உயிரிழந்த நிலையில், சுந்தரமூர்த்தி என்பவர் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.