10 பேரைக் காவு வாங்கிய பட்டாசு ஆலை விபத்து - மேற்பார்வையாளர் கைது

 
arrest

விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், கீழதிருத்தங்கல் கிராமத்தில் இயங்கிவந்த தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில்  எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பெண்கள் மற்றும் 3 ஆண்கள் உட்பட 10 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். வெடி விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில் சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் 10 பேர் இறந்த விவகாரத்தில், பட்டாசு ஆலை மேற்பார்வையாளர் சுரேஷ்குமாரை  சிவகாசி கிழக்கு காவல்நிலைய போலீசார் கைது செய்தனர்.

Fire

அஜாக்கிரதையாக செயல்பட்டு மரணம் ஏற்படுத்தியது உள்ளிட்ட பிரிவுகளில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள பட்டாசு ஆலை உரிமையாளர் சரவணன், ஒப்பந்ததாரர் முத்துகிருஷ்ணனுக்கு போலீசார் வலைவீசியுள்ளனர்.