ஒட்டன்சத்திரம் அருகே ரயில் தண்டவாளத்தில் விரிசல் - பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு

 
tn

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே ரயில்வே தண்டவாளத்தில் திடீரெ விரிசல் ஏற்பட்ட நிலையில், ரயில் ஓட்டுநர் அதனை சுதாரித்துக்கொண்டு ரயிலை நிறுத்தியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. 

கேரள மாநில பாலக்காட்டில் இருந்து திருச்செந்தூர் நோக்கி விரைவு ரயில் சென்றுகொண்டிருந்தது. ஒட்டன்சத்திரம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்ட அந்த ரயில் அதனை தொடர்ந்து திண்டுக்கல் நோக்கி சென்றுகொண்டிருந்தது. இந்த நிலையில், ஒட்டன்சத்திரம் அருகே காமாட்சிபுரம் என்ற பகுதியில் ரயில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்த ரயில் ஓட்டுநர் உடனடியாக அந்த ரயிலை பாதியில் நிறுத்தினார். ரயில் ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்லது. 

இது தொடர்பாக உடனடியாக ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரயில்வே ஊழியர்கள் விரிசல் ஏற்பட்ட தண்டவாளத்தில் சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டனர்.  ரயில்வே பணியாளர்கள் தற்காலிக தண்டவாள இரும்பை அமைத்ததால் மீண்டும் பாலக்காடு-திருச்செந்தூர் விரைவு ரயில் புறப்பட்டுச் சென்றது.