பிப்.4-ல் திமுகவுடன் சிபிஎம் பேச்சுவார்த்தை!!

 
tn

 நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் திமுக தொகுதி பங்கீட்டுக்குழுவுடன் தொகுதி உடன்பாடு தொடர்பாக பேச்சுவார்த்தை மேற்கொள்வதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

stalin

இக்குழுவில் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர்கள் பி. சம்பத் (குழு தலைவர்), பெ. சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினர்கள் என். குணசேகரன், க. கனகராஜ் ஆகியோர் செயல்படுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

K Balakrishnan - கே.பாலகிருஷ்ணன்

இந்நிலையில் தொகுதிப் பங்கீடு குறித்து திமுகவுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக் குழு பிப்.4ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்துகிறது.  மத்தியக் குழு உறுப்பினர் சம்பத் தலைமையில் சண்முகம், குணசேகரன், கனகராஜ் உள்ளிட்ட 4 பேர் கொண்ட குழு பேச்சுவார்த்தை நடத்துகிறது.