திமுக தலைவர்களில் சிலர் பெண்களை கொச்சைப்படுத்தி பேசுவதை சகிக்க முடியவில்லை- சண்முகம்
திமுக தலைவர்களில் சிலர் பெண்களை கொச்சைப்படுத்தி பேசுவதை சகிக்க முடியவில்லை. ஆ.ராசா பேச்சு வன்மையான கண்டனத்திற்குரியது என சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் கூறியுள்ளார்.
திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா அவர்கள் பேச்சு வன்மையான கண்டனத்திற்குரியது.
— Shanmugam P (@Shanmugamcpim) September 13, 2026
திமுக தலைவர்களில் சிலர் தொடர்ந்து பெண்களை கொச்சைப்படுத்தி பேசுவதும் அதைக் கேட்டு தொண்டர்கள் ஆர்ப்பரிப்பதும் சகிக்க முடியவில்லை. அமைச்சர் நிர்மல் குமார் பேசியதை கண்டியுங்கள். அவருடைய தாயாரை இழிவு… pic.twitter.com/Z3ougFBAfz
இதுதொடர்பாக சண்முகம் தனது எக்ஸ் தளத்தில், “திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா அவர்கள் பேச்சு வன்மையான கண்டனத்திற்குரியது. திமுக தலைவர்களில் சிலர் தொடர்ந்து பெண்களை கொச்சைப்படுத்தி பேசுவதும் அதைக் கேட்டு தொண்டர்கள் ஆர்ப்பரிப்பதும் சகிக்க முடியவில்லை. அமைச்சர் நிர்மல் குமார் பேசியதை கண்டியுங்கள். அவருடைய தாயாரை இழிவு படுத்துவதை எப்படி திமுக தலைவர் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்.
பொதுவெளியில் பெண்களை இழிவு படுத்தி பேசுபவர் யாராக இருந்தாலும் அந்தந்த கட்சி தலைமை கண்டிக்கவும், ஒழுங்குபடுத்தவும் முன்வர வேண்டும். சில திமுகவினர் "கண்ணியம்" தவறுவது தொடர்கிறது. "கட்டுப்பாடு" நிலை நிறுத்தும் "கடமை"யை திமுக. தலைவர் செய்வார் என்று நம்புகிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

