மூன்றாம் இடத்திற்குச் சென்ற தமிழ்த்தாய் வாழ்த்து... தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன? - சண்முகம்

 
தற்போது திமுக கூட்டணி இல்லை- சண்முகம்

நெல்லை பல்கலை. பட்டமளிப்பு விழாவில் 3வதாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டதற்கு சிபிஎம் கண்டனம் தெரிவித்துள்ளது.



இதுதொடர்பாக சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் தனது எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு, “மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-வது இடம்: தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன?  தமிழ்நாட்டில் இனிமேல் அரசின் சார்பில் எந்த நிகழ்ச்சி நடந்தாலும் - அது பல்கலைக்கழக நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, தமிழ்த்தாய் வாழ்த்துதான் முதலில் பாடப்பட வேண்டும் என்பதை உறுதிப்படுத்தும் வகையில், வரவிருக்கும் சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே ஒரு புதிய சட்டத்தை தமிழ்நாடு அரசு இயற்ற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நான் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.