திமுக - அதிமுக இணைந்து வருங்காலத்தில் ஒரே கட்சியாக செயல்பட்டால் கூட ஆச்சரியபடுவதற்கில்லை- சண்முகம்
திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளுடனும் சிபிஐ(எம்) மாறி மாறி கூட்டணி வைப்பதும், எதிர்ப்பதும் அரசியல் சூழ்நிலையை பொறுத்தது என சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் தனது எக்ஸ் தளத்தில், “சித்தாந்த ரீதியாகவும் செயல்பாட்டு ரீதியாகவும் திமுகவையும் அதிமுகவையும் சமமாகக் கருத முடியாது. அதே சமயம், திராவிடக் கட்சிகள் தங்களின் பழைய விழுமியங்களையும் கொள்கைகளையும் தற்காலத்தில் முழுமையாகக் கடைப்பிடிப்பதில்லை. தேர்தல் அரசியலில் ஓட்டு வாங்குவதற்காக அவர்கள் சாதியப் பாகுபாடுகள் மற்றும் ஆணவக் கொலைகளுக்கு எதிராகக் களத்தில் நின்று போராடுவதில்லை. இவ்வாறு தம் கொள்கைகளில் பல சமரசங்களைச் செய்து கொண்டு, தங்களைத் தாழ்த்திக் கொண்டுள்ளனர். வரும் காலத்தில், திமுகவும் அதிமுகவும் இணைந்து ஒரே கட்சியாகச் செயல்பட்டால் கூட ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.
சித்தாந்த ரீதியாகவும் செயல்பாட்டு ரீதியாகவும் திமுகவையும் அதிமுகவையும் சமமாகக் கருத முடியாது.
— Shanmugam P (@Shanmugamcpim) June 20, 2026
அதே சமயம், திராவிடக் கட்சிகள் தங்களின் பழைய விழுமியங்களையும் கொள்கைகளையும் தற்காலத்தில் முழுமையாகக் கடைப்பிடிப்பதில்லை.
தேர்தல் அரசியலில் ஓட்டு வாங்குவதற்காக அவர்கள் சாதியப்… pic.twitter.com/VxXQUlyOqI
திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளுடனும் சிபிஐ(எம்) மாறி மாறி கூட்டணி வைப்பதும், எதிர்ப்பதும் அரசியல் சூழ்நிலையை பொறுத்தது. தொகுதி உடன்பாடு கொள்வது, இரு தரப்புக்கும் நன்மை, வெற்றி தரும் ஏற்பாடே தவிர - ஒரு கட்சியின் அரசியல் முடிவில், இன்னொரு கட்சிக்கு 'துரோகம்' என்ற வார்த்தைக்கு இடமில்லை. வெற்றிக்கு பலம் பத்தாததால்தான் கடைசி நேரத்தில் தேமுதிக போன்ற கட்சிகளை திமுக தனது அணியில் சேர்த்தது. எனவே 'எங்களால் நீங்கள் ஜெயித்து, உங்களால் நாங்கள் ஜெயித்தோம்' என்பதே யதார்த்தம். தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்திற்கும், மக்களின் விருப்பத்திற்கும் ஏற்பவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இப்போதைய அரசியல் நிலைப்பாட்டை எடுத்துள்ளது.கூட்டணியை விட்டு விலகினாலே தாக்கும் திமுகவினரின் போக்கு தவறானது. உணர்ச்சிவசப்பட்டுப் பேசும் இத்தகைய நபர்களை திமுக தலைமைதான் கட்டுப்படுத்த வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

