வீரமணி வழக்கு- உயர்நீதிமன்ற நீதிபதி மேற்பார்வையில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை தேவை: சண்முகம்

 
 பத்து நாட்களாக போராட்டம் நடத்தி வரும் தூய்மை பணியாளர்கள் போராட்டம் பேச்சு வார்த்தை மூலம் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெ.சண்முகம் வேண்டுகோள் விருத்துள்ளார்.     சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட  துப்புரவு பணியாளர்கள் கடந்த 10 நாட்களாக  மாநகராட்சி ரிப்பன் மாளிகைக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இவர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் நேரடியாக சந்தித்து,  அவர்களது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “ 10 நாளாக போராடி  வருகின்றனர். இந்த சுமுகமான முறையில் நியாயமான கோரிகை ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்ற எண்ணமே எங்களுக்கு உள்ளது.  அமைச்சர் பேச்சு வார்த்தை குறித்து கூறினார். பேச்சு வார்த்தை சுமுகமான முறையில் முடிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முயற்சி மேற்கொள்ளும்.  தனியார் மையம் என்பது நாடு முழுவதும் நடைபெறும். தமிழகத்திலும் பல்வேறு துறைகளில் தனியார் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் ஏற்கனவே இருக்கும் உரிமையை பறிப்பதை ஏற்க முடியாது. நியாயமான முறையில் இதற்கு தீர்வு காண நாங்கள் முயற்சி மேற்கொள்ளவோம். சாம்சங் விவகாரத்தில் 36 நாட்கள் போராடி உரிமையை பெற்றோம். தொழிலாளர்கள் கோரிக்கை ஏற்க வேண்டும் என்பதையே அரசிடம் நாங்கள் வலியுறுத்துகிறோம். தேர்தல் வாக்குறுதி கொடுத்ததை மட்டுமே அரசு செய்ய வேண்டும் என அவசியம் இல்லை. தற்போது போராடும் கோரிக்கைகளை ஆக்க பூர்வமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று தெரிவித்தார்.

"ஜெம்" வீரமணி பாலியல் கொடுமை உயர்நீதிமன்ற நீதிபதி மேற்பார்வையில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை தேவை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  வலியுறுத்தியுள்ளது.


இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “'ஜெம் கிரானைட்ஸ்' ஆர்.வீரமணி எளிய குடும்பங்களை சேர்ந்த மற்றும் ஆதரவற்ற 100 க்கும் மேற்பட்ட சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ள செய்திகள் பெரும் அதிர்ச்சியைத் தந்துள்ளன. சமூகத்தின் பெரிய மனிதர்கள் என்ற போர்வையில் பணத் திமிரோடு வலம் வருபவர்கள் எவ்வளவு இழிவான குற்றங்களில் ஈடுபடுகிறார்கள் என்பதற்கு "ஜெம்" வீரமணி மீதான குற்றச்சாட்டுக்கள் எடுத்துக்காட்டு. காணொளி ஆதாரத்தில் அடையாளத்தை நிறுவ இயலவில்லை என்ற காரணம் கூறப்பட்டு வழக்கை முடிக்க இருந்த நிலையில், போக்சோ நீதிமன்றம் அதை ஏற்காமல், 2026 ஜூன் 19ம் தேதி மறு விசாரணைக்கு உத்தரவிட்டது என்பது வரவேற்புக்குரியது. போக்சோ நீதிமன்றம் இத்தகைய உத்தரவை பிறப்பித்திருக்காவிட்டால் இவ்வளவு பெரிய கொடூரத்தை நிகழ்த்தியவர்கள் தப்பித்து இருப்பார்கள்.

அதனைத்தொடர்ந்து தவெக அரசாங்கம் வீரமணியை கைது செய்துள்ளதோடு, குற்றத்திற்கு உடந்தையாக இருந்தவர்களையும் கைது செய்து தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தையே உலுக்கியுள்ள பாலியல் வன்கொடுமை வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள், துணை நின்றவர்கள், மறைக்க முயற்சித்தவர்கள் எவராயினும் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு கடுமையான தண்டனைக்கு உள்ளாக்கப்பட வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது. இப்பிரச்சினையில், தமிழ்நாடு அரசால் காவல்துறை ஆணையர் மேற்பார்வையில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. செல்வாக்கு மிக்க மனிதர்கள் சம்பந்தப்பட்ட வழக்கில், ஏற்கெனவே அவர்கள் தப்பித்து செல்லும் வழிகள் உருவாக்கப்பட்ட அனுபவம் உள்ள சூழலில், காவல் ஆணையர் மேற்பார்வையிலான விசாரணை என்பது பொருத்தமானதல்ல. ஆகவே, உயர்நீதிமன்ற நீதிபதி மேற்பார்வையில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது” எனக் குறிப்பிட்டுள்ளது.