"ஈபிஎஸ் விரிப்பது வஞ்சக வலை"- சண்முகம் பதிலடி

 
சண்முகம் எடப்பாடி பழனிசாமி சண்முகம் எடப்பாடி பழனிசாமி

சிதம்பரத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி, “விசிக மாநாட்டுக்கும், கம்யூனிஸ்ட் கட்சிகளின் கொடி கம்பம் நடவும் அனுமதி தர மறுக்கிறார்கள். இவ்வளவு அசிங்கபட்டு திமுக கூட்டணியில் விசிகவும், கம்யூனிஸ்ட் கட்சிகளும் இருக்க வேண்டுமா? அதிமுக கூட்டணிக்கு வரும் கட்சிகளை ரத்தினக் கம்பளம் விரித்து வரவேற்போம்” எனக் கூறினார்.

Marxist P Shanmugam Criticize To Edappadi Palaniswami : அமித்ஷா விரல்  அசைவுக்கு ஏற்ப ஆடும் இபிஎஸ் : திமுக கூட்டணி பற்றி பேசலாமா? - பெ.சண்முகம்  காட்டம்!

எடப்பாடி பழனிசாமியின் அழைப்பு குறித்து கருத்து கூறியுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம், “எடப்பாடி பழனிசாமி காலையில் ஒரு பேச்சு, அதற்கு நேர் மாறாக மாலையில் ஒரு பேச்சு பேசுகிறார். நாடாளுமன்ற தேர்தலின்போது ஒரு பேச்சு, அதற்கு நேர்மாறாக இப்போது பிஜேபியோடு கூட்டணி. போன வாரம் கம்யூனிஸ்ட்களையே காணோம் என்றார், இந்த வாரம் கூட்டணிக்கு அழைக்கிறார். கம்யூனிஸ்டுகளுக்கு எடப்பாடி பழனிசாமி விரிப்பது ரத்தின கம்பளம் அல்ல, வஞ்சக வலை என்பதை அறிந்தே வைத்துள்ளோம். ஆர்.எஸ்.எஸ். எனும் புதை குழிக்குள் விழுந்து வெளியே முடியாமல் சிக்கிக் கொண்டிருப்பது அதிமுக” எனக் கூறியுள்ளார்.