“ஓட்டுக்கு அதிகமாக பணம் வழங்குவது தவெகதான்”- சண்முகம்
மதுராந்தகத்தில் வாக்காளர்களுக்கு தவெக அதிக பணம் கொடுக்கிறார்கள் என அப்பகுதி மக்களே கூறியதாக சி.பி.ஐ.எம் மாநில செயலாளர் சண்முகம் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம், “மதுராந்தகத்தில் வாக்காளர்களுக்கு தவெக அதிக பணம் கொடுக்கிறார்கள் என அப்பகுதி மக்களே கூறுகின்றனர். பிரச்சாரத்துக்கு சென்றபோது வாக்காளர்கள் என்னிடம் இதை தெரிவித்தனர். தூயசக்தி என்று சொல்லி பணம் கொடுக்காமல் கடந்த தேர்தலை சந்தித்தது தவெக. ஆனால் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு மற்ற கட்சிகளை விட அதிகமாக பணம் வழங்குவது தவெகதான். தவெக வேட்பாளர்களுக்கு வாக்களிக்க மக்களுக்கு பணம் கொடுக்கப்படுகிறது. நேர்மையாக தேர்தலை நடத்த வேண்டிய தேர்தல் ஆணையம் வாக்குரிமையை பறித்திருக்கிறது. வாக்குக்கு பணம் கொடுக்க மாட்டோம் என்கிறார் முதல்வர். ஆனால் பணம் விநியோகம் செய்யப்படுகிறது. வாக்காளர்கள் வாக்குக்கு பேரம் பேசும் நிலை உருவாகியுள்ளது. பரப்புரையின்போது எங்களிடமும் வாக்காளர்கள் பணம் கொடுங்கள் என கேட்கிறார்கள்” எனக் குற்றஞ்சாட்டினார்.

