“வீரமணியை தப்பிக்க வைத்தது யார்?” - பெ.சண்முகம்

 
 பத்து நாட்களாக போராட்டம் நடத்தி வரும் தூய்மை பணியாளர்கள் போராட்டம் பேச்சு வார்த்தை மூலம் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெ.சண்முகம் வேண்டுகோள் விருத்துள்ளார்.     சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட  துப்புரவு பணியாளர்கள் கடந்த 10 நாட்களாக  மாநகராட்சி ரிப்பன் மாளிகைக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இவர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் நேரடியாக சந்தித்து,  அவர்களது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “ 10 நாளாக போராடி  வருகின்றனர். இந்த சுமுகமான முறையில் நியாயமான கோரிகை ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்ற எண்ணமே எங்களுக்கு உள்ளது.  அமைச்சர் பேச்சு வார்த்தை குறித்து கூறினார். பேச்சு வார்த்தை சுமுகமான முறையில் முடிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முயற்சி மேற்கொள்ளும்.  தனியார் மையம் என்பது நாடு முழுவதும் நடைபெறும். தமிழகத்திலும் பல்வேறு துறைகளில் தனியார் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் ஏற்கனவே இருக்கும் உரிமையை பறிப்பதை ஏற்க முடியாது. நியாயமான முறையில் இதற்கு தீர்வு காண நாங்கள் முயற்சி மேற்கொள்ளவோம். சாம்சங் விவகாரத்தில் 36 நாட்கள் போராடி உரிமையை பெற்றோம். தொழிலாளர்கள் கோரிக்கை ஏற்க வேண்டும் என்பதையே அரசிடம் நாங்கள் வலியுறுத்துகிறோம். தேர்தல் வாக்குறுதி கொடுத்ததை மட்டுமே அரசு செய்ய வேண்டும் என அவசியம் இல்லை. தற்போது போராடும் கோரிக்கைகளை ஆக்க பூர்வமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று தெரிவித்தார்.

மக்களுக்கு எதிரான செயல்பாடுகளில் தவெக அரசு ஈடுபட்டால் கேள்வி கேட்போம் சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம் கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம், “தவெக ஆட்சிக்கு இடதுசாரிகள் நிபந்தனையற்ற ஆதரவு அளிக்கவில்லை. மக்களுக்கு எதிரான செயல்பாடுகளில் தவெக அரசு ஈடுபட்டால் கேள்வி கேட்போம். நிபந்தனையற்ற ஆதரவோ.. இந்த அரசாங்கம் என்ன செய்தாலும் ஆதரிப்போம் என்ற வாக்குறுதியோ எல்லாம் நாங்கள் கொடுக்கவில்லை. ஜெம் வீரமணி ஜெயலலிதா ஆட்சியிலும், ஸ்டாலின் ஆட்சியிலும் தப்பித்துள்ளனர். ஜெம் கிரானைட் வீரமணி பாலியல் குற்ற வழக்கில் திமுக, அதிமுக இரண்டு ஆட்சியிலும் அவர் மீது புகார் பதிவு செய்யப்பட்டு முறையாக விசாரணை நடைபெறவில்லை. எனவே, அனைத்து புகார்களையும் விரிவான விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்.

இந்த குற்றத்தை மூடி மறைக்க உதவிய காவல்துறை அதிகாரிகள், அழுத்தம் கொடுத்த அன்றைய ஆட்சியாளர்களையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்து யார் யாரெல்லாம் சம்பந்தப்பட்டுள்ளார்கள் என்பதைக் கண்டறிய விரிவான விசாரணை நடத்தப்பட்டு அனைவரும் தண்டிக்க வேண்டும்.காவல் துறையினருக்கு அழுத்தம் கொடுத்த முன்னாள் ஆளுங்கட்சியினர் யார்? ஸ்டாலின் முதல்வராக இருந்தபோதும் வீரமணி தப்பித்துள்ளார். வீரமணியை தப்பிக்க வைத்தது யார்? போலீசார் நடவடிக்கை எடுக்காமலிருக்க அழுத்தம் கொடுத்தது யார்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.