“தவெக ஆட்சி கவிழும் என திமுக தலைவர் ஸ்டாலின் சொல்வது நடக்க வாய்ப்பில்லை”- சண்முகம்

 
s

தவெக ஆட்சி கவிழும் என திமுக தலைவர் ஸ்டாலின் சொல்வது, நடக்க வாய்ப்பில்லை என சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.

விஜய்க்கு ஆதரவான கருத்து திணிப்பு..." - சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம்  காட்டம்! | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News) - News18 Tamil

முதல்வர் விஜய் உடனான சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன், “மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம், “இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தோழமை கட்சிகளுக்கான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கவில்லை. நாங்கள் ஆட்சியில் அங்கம் வகிக்கவில்லை. தோழமை கட்சியாகவும் கூட்டணியில் இல்லை. வெளியிலிருந்து ஜனநாயகத்திற்காக மக்கள் அதிகாரத்தைப் பாதுகாக்க வேண்டும்,மக்கள் அதிகாரத்தை ஆளுநர் கடந்து விடக்கூடாது என்கிற அரசியல் காரணங்களுக்காக இருவரும் வெளியிலிருந்து ஆதரவளிக்கிறோம். தோழமை கட்சிகளுக்கு ஒரு தேநீர் விருந்து என்பது பொழுது அங்கே அந்த ஒரு நல்ல சூழல் கெடக்கூடாது, அந்த வகையில் அது அவர்களுக்கான தேநீர் விருந்து நடக்கட்டும். வாழ்த்துக்கள், மகிழ்ச்சி. இங்கு வெளியிலிருந்து நாங்கள் ஆதரவு அளிக்கிறோம். அந்த அமைச்சரவையில் இருக்கிறவர்கள் தோழமை கட்சியினர் கலந்து கொள்கிற அந்த சூழலில் வேறு எந்த சூழலும் கெடுக்கிற எந்த காரணிகளும் வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் நாங்கள் இங்கு முதல்வரை வந்து சந்திக்கிறோம்” என்றார்.

பின்னர் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம், “நாங்கள் ஏற்கனவே இந்த அரசு அமைவதற்கு இடதுசாரி கட்சிகள் வெளியிலிருந்து ஆதரவு என்பதை வெளிப்படையாக அறிவித்து, அந்த ஆதரவு என்பது தொடரும் என்று தெரிவித்திருக்கிறோம்.  அதிலேயே கடுகளவு எந்த விதமான குந்தகமும் ஏற்படாது.அதை நாங்கள் வெளிப்படையாகத் தெரிவித்திருக்கிறோம். ஆகவே, அந்த விருந்தில் கலந்து கொண்டால்தான் அது பலப்படுத்துவது, விருந்தில் கலந்துகொள்ளாவிட்டால் அது பலவீனப்படுத்துவது என்ற முறையில் நாங்கள் பார்க்கவில்லை. இல்லையென்றால் இன்று முதலமைச்சரைச் சந்திக்க வேண்டிய அவசியமே இருந்திருக்காது. அது ஏற்கனவே தோழர் வீரபாண்டியன் அவர்கள் விளக்கிவிட்டார்.  நாங்கள் அந்த விருந்தில் கலந்து கொள்ளவில்லை. மற்றபடி அரசுக்கான ஆதரவு என்பது தொடர்கிறது” என்றார்.