தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: விஜய் கூறியது இதுதான் - சண்முகம் விளக்கம்
அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில் மூன்றாவதாக தமிழ்ந்தாய் வாழ்த்து பாடியது குறித்த கேள்விக்கு முதலமைச்சர் அளித்த விளக்கத்தை சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம் செய்தியாளர்களிடம் விளக்கினார்.
இதுதொடர்பாக சண்முகம் கூறுகையில், “வந்தே மாதரம், அதன் பிறகு தேசிய கீதம், அதற்கு அடுத்து தமிழ்த்தாய் வாழ்த்து என்பது சம்பந்தமாக இப்போது முதலமைச்சரிடம் கேட்டோம்.ஆளுநர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் மட்டும் இத்தகைய நடைமுறையைப் பின்பற்ற வேண்டும் என்று மத்திய அரசாங்கத்தின் ஒரு உத்தரவு உள்ளது. அதை மாற்ற வேண்டும் என்பதற்கான முயற்சிகளை ஆளுநருடன் பேசி நாங்கள் மேற்கொண்டோம். ஆனால் ஆளுநர் அதை ஏற்க மறுத்துவிட்டார். மத்திய அரசாங்கத்தின் பிரதிநிதி என்கிற முறையில் மத்திய அரசாங்கத்தின் உத்தரவைத்தான் நான் பின்பற்ற வேண்டும் என்று ஆளுநர் அவர்கள் தெரிவித்துவிட்ட நிலையில், ஆளுநர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் இதைத் தவிர்க்க முடியாமல் இருக்கிறது என்பதை முதலமைச்சர் அவர்கள் தெரிவித்தார்கள்” என்றார்.

