5 தொகுதிகளை ஏற்றுக்கொண்டது ஏன்?- சண்முகம் பேட்டி

 
சண்முகம்

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்க்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின், சண்முகம் முன்னிலையில் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம், “திமுக கூட்டணியில் அதிகமாககவும், புதிதாகவும் கட்சிகள் சேர்ந்த சூழலில் நாங்கள் கேட்கும் கூடுதல் தொகுதிகளை தரமுடியாத சூழல் உள்ளதாக முதலமைச்சர் கூறினார். 6க்கு பதிலாக 5 தொகுதிகளை ஏற்க வேண்டும் என முதலமைச்சர் கேட்டுக் கொண்டார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முடிவு எந்தவகையிலும் பாஜக, அதிமுக கூட்டணிக்கு சாதகமாகிவிடக்கூடாது என்பதற்காக 5 தொகுதிகளை ஏற்கிறோம். தொகுதி எண்ணிக்கை குறைவதால் கட்சிகள் அழியும் என்கிற செயல்பாடு என்பது இந்தக் கூட்டணியில் இல்லை” என்றார்.