"ரூ. 35 என்பது அநியாய விலை.. ஒப்பந்தத்தை ரத்து செய்க..!" - அரசுக்கு சிபிஎம் வலியுறுத்தல்

 
 பத்து நாட்களாக போராட்டம் நடத்தி வரும் தூய்மை பணியாளர்கள் போராட்டம் பேச்சு வார்த்தை மூலம் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெ.சண்முகம் வேண்டுகோள் விருத்துள்ளார்.     சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட  துப்புரவு பணியாளர்கள் கடந்த 10 நாட்களாக  மாநகராட்சி ரிப்பன் மாளிகைக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இவர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் நேரடியாக சந்தித்து,  அவர்களது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “ 10 நாளாக போராடி  வருகின்றனர். இந்த சுமுகமான முறையில் நியாயமான கோரிகை ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்ற எண்ணமே எங்களுக்கு உள்ளது.  அமைச்சர் பேச்சு வார்த்தை குறித்து கூறினார். பேச்சு வார்த்தை சுமுகமான முறையில் முடிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முயற்சி மேற்கொள்ளும்.  தனியார் மையம் என்பது நாடு முழுவதும் நடைபெறும். தமிழகத்திலும் பல்வேறு துறைகளில் தனியார் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் ஏற்கனவே இருக்கும் உரிமையை பறிப்பதை ஏற்க முடியாது. நியாயமான முறையில் இதற்கு தீர்வு காண நாங்கள் முயற்சி மேற்கொள்ளவோம். சாம்சங் விவகாரத்தில் 36 நாட்கள் போராடி உரிமையை பெற்றோம். தொழிலாளர்கள் கோரிக்கை ஏற்க வேண்டும் என்பதையே அரசிடம் நாங்கள் வலியுறுத்துகிறோம். தேர்தல் வாக்குறுதி கொடுத்ததை மட்டுமே அரசு செய்ய வேண்டும் என அவசியம் இல்லை. தற்போது போராடும் கோரிக்கைகளை ஆக்க பூர்வமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று தெரிவித்தார்.

ஒரு யூனிட் மின்சாரம் 35 ரூபாய் என்ற உடன் "ஷாக் அடித்தது" போல் ஆகிவிட்டது என சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு மின்சார வாரியம் பற்றாக்குறையை சமாளிக்க ஒரு யூனிட் மின்சாரம் சராசரியாக ரூபாய் 35 என்ற விகிதத்தில் கொள்முதல் செய்யவிருப்பதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கிறது. இந்தியாவில் இவ்வளவு அதிக விலைக்கு எந்த மாநிலமும், எந்த காலத்திலும் கொள்முதல் செய்ததில்லை. தற்போது பற்றாக்குறை நிலவுகிறது என்பது உண்மை. ஆனால், பல வாரங்களாகவே மின்வெட்டு இருப்பதை பொதுமக்கள், அரசியல் கட்சிகள், பல இயக்கங்கள் அரசின் கவனத்திற்கு கொண்டு வந்தபோதும் தமிழ்நாடு அரசும், மின்சார வாரியமும் இவற்றையெல்லாம் மறுத்தே வந்திருக்கிறது. மின் பற்றாக்குறையை முன்கூட்டியே கணக்கிட்டு உரிய காலத்தில் தேவையான நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், மின்வெட்டை காரணம் காட்டி கொள்ளை விலைக்கு கொள்முதல் செய்வது முற்றிலும் நியாயமற்ற அணுகுமுறையாகும். இந்தியாவில் பல்வேறு வகைகளில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் விலை ரூபாய் 2.45 லிருந்து 5.30 வரையே இருக்கிறது. தவிர்க்க முடியாத நிலையில் டீசல் மூலம் உற்பத்தி செய்தால் மட்டுமே அதிகமான விலை கொடுக்க வேண்டியிருக்கும். அவை கூட விற்பனைக்கு வருவதில்லை. மாறாக, தனியார் நிறுவனங்கள் தங்கள் தேவைக்காக அதைப் பயன்படுத்துகின்றனர்.

இந்த நிலையில், 35 ரூபாய்க்கு கொள்முதல் என்பது நம்ப முடியாததாகவும், அதிர்ச்சியளிப்பதாகவும், தமிழ்நாட்டில் நிலவும் மின் பற்றாக்குறையை பயன்படுத்திக் கொண்டு தனியார் நிறுவனங்களுக்கு அரசுப் பணத்தை தாராளமாக அள்ளிக் கொடுப்பதுமாகும். ஏற்கனவே, மின்வெட்டு, மின் கட்டண உயர்வு என்று கடும் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் தமிழக மக்கள் மீது மீண்டும் ஒரு சுமையை ஏற்றுவதற்கு வழிவகுப்பதாகும். எனவே, தமிழ்நாடு அரசாங்கமும், மின்வாரியமும் அநியாய விலைக்கு கொள்முதல் செய்யப் போட்டுள்ள இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு நியாயமான விலையில் கொள்முதல் செய்ய முன்வர வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது. மேலும், தமிழ்நாடு மின் உற்பத்தியில் தன்னிறைவு அடையும் வகையில் தொலைநோக்கு திட்டம் உருவாக்கப்பட தமிழ்நாடு அரசு முன்வர வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.