‘மக்கள் விரோத பாஜக அரசே வெளியேறு’ இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் மறியல் போராட்டம்

 
சிபிஐ

“பாஜகவின் மோடி ஒன்றிய அரசே! ஆட்சியிலிருந்து வெளியேறு” என்ற முழக்கத்தை முன்வைத்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, இன்று (13.09.2023) தமிழ்நாடு முழுவதும் இரண்டாவது நாளாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்டது. 

Image

இதுதொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நேற்று (12.09.2023) நடந்த மறியல் போராட்டத்தில் 50க்கும் மேற்பட்ட மையங்களில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இன்று (13.09.2023) 60க்கும் மேற்பட்ட மையங்களில் நடந்த மறியல் போராட்டத்தில் 3000 பெண்கள் உட்பட
18 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பேர் கலந்து கொண்டனர். நாளை 14.09.2023 சென்னை ஆளுநர் மாளிகை உட்பட தமிழ்நாட்டில் நூற்றுக்கும் அதிகமான மையங்களில் மறியல் போராட்டம் நடைபெறுகிறது.

நாட்டின் ஜனநாயக வாழ்வுக்கும், கூட்டாட்சி முறைகளுக்கும் ஏற்பட்டுள்ள பேராபத்தை தடுக்கவும், மக்களின் வாழ்க்கை தர மேம்பாட்டிற்கும் பாஜக அரசை ஆட்சியில் இருந்து அகற்றுவது முன் தேவையாகியுள்ளது. இந்த முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் கடமையில் ஈடுபட்டுள்ள இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மறியல் அறப்போராட்டத்திற்கு அனைத்து பகுதி மக்களும் பேராதரவு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.