ஆளுநருக்கு எதிராக கருப்பு கொடி காட்டிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்!

 
tn

பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக வருகை தந்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கருப்பு கொடி காட்டியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

இந்திய சுதந்திர போராட்ட வீரர் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான சங்கரய்யாவுக்கு  மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் சார்பில் கௌரவ டாக்டர் பட்டம் வழங்குவதற்கான பரிந்துரையை தமிழ்நாடு ஆளுநர்  ரவிக்கு அனுப்பப்பட்டது. ஆனால் தமிழ்நாடு அரசின் பரிந்துரையை ஆளுநர் ரவி புறக்கணித்தார்.
இதன் காரணமாக மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இன்று நடக்கும் பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் கலந்து கொள்ளும் நிலையில் பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்பதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.  தமிழகத்தில் உள்ள சுதந்திர போராட்ட வீரர்கள் மீது அக்கறையாக உள்ளவர்கள் போல பேசும் ஆளுநர்,  ஏன் ஒப்புதல் அளிக்கவில்லை என்றும் ஆளுநர் வரலாறு தெரியாமல் பேசியிருக்கிறார் என்றும் அமைச்சர் பொன்முடி குற்றம் சாட்டினார். 

இந்த நிலையில், பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக வருகை தந்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கருப்பு கொடி காட்டியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கருப்புக்கொடிகருப்பு கொடி ஏந்தியும், கருப்புச்சட்டை அணிந்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆளுநருக்கு எதிராக முழக்கம் எழுப்பிய போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.  மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க ஆளுநர் ஆர்.என்.ரவி வருகையின் போது கருப்பு கொடி காட்டப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.