“எந்த பெண்ணுக்கும் நடக்க கூடாத ஒரு கொடூரம்”- சி.பி. ராதாகிருஷ்ணன்
Nov 4, 2025, 20:37 IST1762268866485
கோவை பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு காவல்துறை அதிகபட்ச தண்டனையை பெற்றுத் தருவார்கள் என்று நம்புகிறேன் என குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், “கோவை பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையை காவல்துறை பெற்றுதர வேண்டும். எந்த பெண்ணுக்கும் நடக்க கூடாத ஒரு கொடூரம் கொங்கு மண்டலத்தில் நடந்துள்ளது என்பது தாங்க முடியாத வேதனையை தருகிறது. மாணவிக்கும், பெற்றோருக்கும் ஆறுதலை தெரிவித்துக்கொள்கிறேன். பாதித்த மாணவி, அவரது குடும்பத்துக்கு நாம் என்றென்றும் உறுதுணையாக இருக்க வேண்டும். வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற இலக்கை நோக்கி இந்தியா வேகமாக பயணித்து வருகிறது” என்றார்.


