உறையால் மூடப்பட்ட கவர்! ஜெயலலிதா சொத்து விவகாரத்தில் நீதிபதி எடுத்த முடிவு

 
j

ஜெயலலிதாவின் பொருட்களுக்கு அவரின் உறவினர்  தீபா உரிமை கோரி இருக்கும் வழக்கில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை  அதிகாரி பூங்காவனம் உரையால் மூடப்பட்ட  கவர் ஒன்றைக் கொடுக்க,  அதில் உள்ளவற்றை பார்த்த நீதிபதி வழக்கின் விசாரணையை வரும் ஜூன் 3ஆம் தேதிக்கு ஒத்தி வைத்திருக்கிறார்.

 மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்துக் குறிப்பு வழக்கில் சிக்கிய போது அவரின் வீட்டின் பொருட்கள் ஜப்தி செய்யப்பட்ட போது அங்கு பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் அனைத்தும் கர்நாடக அரசால் பறிமுதல் செய்யப்பட்டது .  அந்த பொருட்கள் கர்நாடக அரசின் கருவூலத்தில் வைக்கப்பட்டு இருக்கிறது.  இந்த வழக்கில் ஜெயலலிதா மறைந்து விட்டதால் சசிகலா ,இளவரசி, சுதாகரன்  ஆகியோர் சிறை தண்டனை பெற்று அவர்களும் சிறை தண்டனை அனுபவித்து விடுதலை ஆகி விட்டனர்.  ஆனால் ஜெயலலிதாவின் பொருட்கள் இன்னமும் கர்நாடக அரசின் கருவூலத்தில் அப்படியே இருக்கிறது.

j

 அவை வீணாகிவிடும் என்றும் அவற்றை ஏலம் இடம் வேண்டும் என்றும் தகவல் உரிமை சட்ட ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி பெங்களூர் சிட்டி சிவில் மற்றும் செசன்ஸ் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார் . ஜெயலலிதாவின் பொருட்களை ஏலம் விட உத்தரவிட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று அதில் கூறியிருந்தார்.   நீதிபதி எச். ஏ .மோகன் முன்னிலையில் இந்த மனு மீதான விசாரணை நடந்து வருகிறது .

 விசாரணையில் ஜெயலலிதாவின் பொருட்களை ஏலம் விட வேண்டும் என்று கர்நாடக அரசு சிறப்பு வழக்கறிஞர் கி நியமிக்கப்பட்டார்.   இந்த வழக்கின் விசாரணை கடந்த ஐந்தாம் தேதி நீதிமன்றத்தில் நடந்தபோது , ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயராமன் மகள் தீபா தரப்பில் வழக்கறிஞர் ஆஜராகி ஜெயலலிதாவின் வாரிசு தீபா என்று சொல்லி ஜெயலலிதாவின் சொத்துக்களை தமிழ்நாடு நீதிமன்றம் தீபாவிடம் ஒப்படைத்து தீர்ப்பு அளித்திருக்கிறது .

அந்த வகையில் இந்த வழக்கில் தொடர்புடைய ஜெயலலிதாவின் பொருட்களை தீபாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று வாதிட்டார்.   உடனே நீதிபதி  முறையாக மனு தாக்கல் செய்து ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.  கர்நாடகத்தின் கருவூலத்தில் இருக்கும் சேலைகள், செருப்புகள், சால்வைகள் இல்லை என்று நீதிபதி தெரிவித்தார்.  அதற்கு நரசிம்மமூர்த்தி,  அது குறித்த ஆவணங்களை பெற்று தாக்கல் செய்வதாக கூறியிருக்கிறார் .

இந்நிலையில் பெங்களூரு சிட்டி சிவில் செசன்ஸ் நீதிமன்றத்தில் நீதிபதி ஹெச்.ஏ. மோகன் முன்னிலையில் இந்த மனு மீதான விசாரணை நேற்று மீண்டும் நடந்தது. அப்போது தீபா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் , ஜெயலலிதாவின் பொருட்களுக்கு உரிமை கோரி மனு ஒன்றை தாக்கல் செய்தார்.  தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் ஆஜரான அதிகாரி பூங்காவனமும் உரையால் மூடப்பட்ட கவர் ஒன்றை நீதிபதியிடம் கொடுத்தார்.  இதன் பின்னர் இந்த வழக்கின் விசாரணையை வரும் ஜூன் மூன்றாம் தேதிக்கு ஒத்தி வைத்தார் நீதிபதி எச். ஏ. மோகன்.