அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக அண்ணாமலை மீது வழக்குப்பதிவு!
கோவை காந்திபுரம் பகுதியில் அனுமதியின்றி கூட்டத்தை கூட்டி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு
செய்யப்பட்டுள்ளது
கோவை குண்டுவெடிப்பு குற்றவாளி பாட்ஷா இறுதி ஊர்வலத்திற்கு அனுமதி அளித்த தமிழக அரசுக்கு எதிராக இந்து இயக்க கூட்டமைப்பு சார்பில் கருப்பு தின பேரணி நடைபெற்றது. கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் அருகே தமிழக அரசை கண்டித்து நடைபெற்ற பேரணியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாஜகவினர் ஈடுபட்டனர். அவர்களை சித்தாபுதூர் பகுதியில் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். கோவை குண்டுவெடிப்பு தீவிரவாதிகளுக்கு தமிழக அரசு துணைப்போவதாக பாஜகவினர் குற்றம் சாட்டினர். தடையை மீறி பேரணியாக சென்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், கோவை காந்திபுரம் பகுதியில் அனுமதியின்றி கூட்டத்தை கூட்டி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் அக்கட்சி நிர்வாகிகள் பலர் மீது அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.