கோவை மாநகராட்சி மேயர் திடீர் ராஜினாமா

 
கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ராஜினாமா

கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் தனது பதவியை ராஜினாமா செய்தார். 

Image

கோவை மாநகராட்சி திமுக மேயர் கல்பனா ஆனந்தகுமார். இவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மாநகராட்சி ஆணையரிடம் ராஜினாமா கடிதத்தை தனது உதவியாளர் மூலம் வழங்கியுள்ளார். உடல் நிலையை காரணம் காட்டி கல்பனா பதவியை ராஜினாமா செய்துள்ளார் என கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

மருத்துவ காரணங்களுக்காக பதவியை ராஜினாமா செய்வதாக, தனது கடிதத்தில் அவர் தெரிவித்திருந்தாலும், திமுகவில் உட்கட்சி மோதல் வெடித்துள்ளதாக கட்சியின் நிர்வாகிகளே தெரிவித்து வருகின்றனர்.