கோடை வெப்பத்தால் வறண்டு போன குற்றால அருவிகள்

 
tn

கோடை வெப்பத்தின் காரணமாக சுற்றுலா குற்றால அருவிகள் வறண்டு காட்சியளிக்கின்றன.

Courtallam

குற்றால அருவிகள் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தென்காசி மாவட்ட குற்றாலம் பேரூராட்சியில், மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளவை. மேற்குத் தொடர்ச்சி மலை சிற்றாறு, மணிமுத்தாறு, பச்சையாறு மற்றும் தாமிரபரணி ஆறுகளின் பிறப்பிடமாகும். குற்றால அருவி நீர் பல்வேறு மூலிகைகளில் கலந்து வரும் தண்ணீர் ஆதலால் இதில் நீராடுவது ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது.

Courtallam

இந்நிலையில் தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை கோடை மழை பெய்து வந்தது. இதன் காரணமாக குற்றாலத்தில் பிரதான அருவியான  ஐந்தருவி , பழைய குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.  கடந்த ஒரு வாரமாக மழை குறைந்து மீண்டும் அருவிகளில் குளிக்க  அனுமதி அளிக்கப்பட்ட நிலையில்,  கடந்த இரண்டு நாட்களாக கோடை வெயில் சுட்டெரிக்க தொடங்கிவிட்டது.  இதன் காரணமாக அருவியில் நீர்வரத்து முற்றிலும் குறைந்து வறண்டு போய்விட்டன. குற்றால அருவி நேற்று பாறையை ஒட்டி தண்ணீர் வழிந்தது. மற்ற அருவிகளில் தண்ணீர் விழவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் அங்கிருந்து சென்றனர்.