குற்றாலத்தில் சாரல் திருவிழா 19-ஆம் தேதி தொடக்கம்

 
சாரல் திருவிழா சாரல் திருவிழா

குற்றாலத்தில்  வரும்   19 முதல் 27 ம் தேதி வரை சாரல் திருவிழா  நடைபெற உள்ளது, இதில் முதல் நான்கு நாட்கள் மலர் கண்காட்சியும் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் தெரிவித்தார்.

குற்றாலத்தில் ஆகஸ்ட் 5-ல் சாரல் விழா தொடக்கம்: புத்தகத் திருவிழா 10 நாள்  நடத்தவும் ஏற்பாடு | Saral festival begins - hindutamil.in

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன் முதல் ஆகஸ்ட் வரை சீசன் காலமாகும். தற்போது அனைத்து அருவிகளிலும் தண்ணீர் சீராக விழுந்து கொண்டிருப்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். சீசன் காலத்தில் ஆண்டு தோறும் அரசு சார்பில் சாரல் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு சாரல் திருவிழா வரும் 19ஆம் தேதி துவங்குகிறது.

இதுகுறித்து தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் செய்தியாளர்களிடம் கூறுகையில் இந்த ஆண்டு சாரல் திருவிழா வரும் 19ஆம் தேதி துவங்கி 27ஆம் தேதி வரை 9 நாட்கள் நடைபெற உள்ளது. இதில் முதல் நான்கு நாட்கள், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பாக ஐந்தருவி   சுற்றுச்சூழல் பூங்காவில்  மலர்க்கண்காட்சி நடைபெறவுள்ளது. சாரல் திருவிழாவில் தினமும் ஒவ்வொரு நாளும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளது என்றார்.