#BREAKING டிச.3ல் பாடகி கெனிஷா ஆஜராக நீதிமன்றம் உத்தரவு

 
ஜெயம் ரவியுடனான தொடர்பை நிறுத்தி கொள்கிறேன்- கெனிஷா அறிவிப்பு

நடிகர் ரவி மோகனின் மனைவி ஆர்த்தி தொடர்ந்த அவதூறு வழக்கில் டிசம்பர் 3ஆம் தேதி கெனிஷா ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.  

Image


நடிகர் ரவி மோகனின் மனைவி ஆர்த்தி தொடர்ந்த அவதூறு வழக்கில் பாடகி கெனிஷா டிசம்பர் 3ம் தேதி நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நடிகர் ரவி மோகன் மற்றும் ஆர்த்தி ஆகியோரின் விவகாரத்து வழக்கு ஏற்கனவே நிலுவையும் உள்ளது. இந்நிலையில் கெனிஷாவுக்கு எதிராக ஆர்த்தி ரவி, சிவில் அவதூறு வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்திருந்தார்.

அந்த மனுவில், தன்னை பற்றி அவதூறாக பேச தடை விதிக்க வேண்டும். ஏற்கனவே தன்னை பற்றி கெனிஷா சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவுகளை நீக்க உத்தரவிட வேண்டும். கெனிஷா ரூ.1.1 கோடி நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட வேண்டும்" என ஆர்த்தி ரவி கோரியுள்ளார். வழக்கை விசாரித்த நீதிபதி மரியா கிளாட், சாட்சிகள் பதிவுக்காக விசாரணையை மாஸ்டர் நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவு பிறப்பித்தார். வழக்கு தொடர்பாக கெனிஷா வரும் டிசம்பர் 3-ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும், ஆஜராகாதபட்சத்தில், இந்த வழக்கு அன்றே விசாரித்து முடிக்கப்படும் என மாஸ்டர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.