குதிரை பேர வழக்கில் மன்னனை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு
குதிரை பேர வழக்கில் கைதான அதிமுக நிர்வாகியான மன்னனை உடனடியாக விடுவிக்க மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மதுரை மத்திய தொகுதி எம்எல்ஏ முஸ்தபாவிடம் 15 கோடி பேரம் பேசியதான புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் அதிமுக முன்னாள் மேயர் மன்னனை நேற்று காலை காவல்துறை கைது செய்தது.
இந்நிலையில் குதிரை பேர வழக்கில் கைதான அதிமுக நிர்வாகியான மன்னனை உடனடியாக விடுவிக்க மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நாளை ஆஜராக சம்மன் கொடுத்து விட்டு இன்றே கைது செய்தது ஏன் எனவும் தமிழ்நாடு காவல்துறையினருக்கு நீதிபதி கேள்வி எழுப்பினார். தமிழக வெற்றி கழக ஆட்சியை கவிழ்க்க 15 கோடி ரூபாய் வரை பேரம் பேசியதாக மதுரை எம்எல்ஏ முஸ்தபா கூறியிருந்த நிலையில் அவரை தமிழ்நாடு காவல்துறை அவசர அவசரமாக கைது செய்திருந்தது. தற்பொழுது நீதிமன்றமும் காவல்துறையை கண்டித்து உள்ளது. மேலும் மன்னனை சிறைக்கு அனுப்பி வைக்க மறுப்பு தெரிவித்த நீதிபதி, நாளை விசாரணை அதிகாரி முன்பு ஆஜராக ஆணையிடப்பட்டுள்ளது. உடனடியாக அவரை விடுவிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

