60 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பை இடிக்க ஐகோர்ட் உத்தரவு

60 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பை இடிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
லதா கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் என்ற நிறுவனம் எந்தவிதமான திட்ட அனுமதியும் இன்றி அரும்பாக்கத்தில் 60 வீடுகள் கொண்ட குடியிருப்பை கட்டியுள்ளது. விதிமுறைகளை மீறி, 2015-ம் ஆண்டே குடியிருப்பை இடிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிடுகிறது. ஆனால்,எந்த நடவடிக்கையும் மாநகராட்சியால் மேற்கொள்ளப்படவில்லை.
இந்நிலையில் கடந்த 01-09-23 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகள் லக்ஷ்மி நாராயணன்,நிஷாபானு அடங்கிய அமர்வு 8 வார காலத்திற்குள் சட்டவிரோத அடுக்குமாடி குடியிருப்பை இடிக்க உத்தரவிட்டுள்ளது. அரும்பாக்கம் போன்ற நகரின் மையப்பகுதியில் 60 வீடுகள் கொண்ட குடியிருப்பை அனுமதியின்றி,கட்டுவதற்கு அனுமதித்த அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும். ஆனால்,அதற்கு மாறாக,அதே அதிகாரிகளை கட்டிடத்தின் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.