அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 17வது முறையாக நீட்டிப்பு!!

 
senthil balaji

சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில், அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த ஆண்டு ஜூன் 14ம் தேதி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். அவருக்கு எதிராக சுமார் மூவாயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை மற்றும் ஆவணங்கள், 27 சாட்சிகளின் வாக்குமூலங்களுடன் கடந்த ஆகஸ்ட் 12ம் தேதி அமலாக்கத் துறையால் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதனிடையே செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 15வது முறையாக, ஜனவரி 22ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இதேபோல் செந்தில் பாலாஜி, ஜாமீன் கேட்டு 3-வது முறையாக மனுதாக்கல் செய்திருந்த நிலையில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி, ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். 

senthil balaji

கடந்த 22 ஆம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 16 வது முறையாக நீட்டிக்கப்பட்டது. ஜூன் 14ல் கைதான செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் முடிவடைந்த நிலையில், புழல் சிறையிலிருந்து காணொலி காட்சி மூலம் ஆஜர்படுத்தபட்டார். இதனையடுத்து ஜனவரி 29 வரை அவரது காவலை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.

senthil balaji

இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 17வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் ஜனவரி 31ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவு பிறப்பித்துள்ளார்.