திருவண்ணாமலை கோயிலில் முட்டை பிரியாணியுடன் சிக்கன் கிரேவி சாப்பிட்ட தம்பதி

 
ழ் ழ்

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலின் 5-ம் பிரகாரத்தில் முட்டை பிரியாணி உடன் சிக்கன் கிரேவி சாப்பிட்ட தம்பதியால்  பரபரப்பு ஏற்பட்டது.

உலகப் பிரசித்தி பெற்ற பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகும் நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாகும் விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலின் 5 ஆம் பிரகாரத்தில் கணவன் மனைவி இருவரும் அமர்ந்து முட்டை பிரியாணி உடன் சிக்கன் கிரேவி சாப்பிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வரும் நிலையில் அண்ணாமலையாரின் புனிதத்தை கெடுக்கும் வகையில் நேற்று பிற்பகல் திருவண்ணாமலை ராமலிங்கனார் தெருவை சேர்ந்த ரமேஷ் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரும் முட்டை பிரியாணி உடன் சிக்கன் கிரேவி பார்சல் வாங்கிக்கொண்டு கோபுரத்திற்கு உள்ளே வந்து 5-ம் பிரகாரத்தில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருப்பதை அந்த வழியாக வந்த நபர் பார்த்து அதிர்ச்சி அடைந்து திருக்கோவிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் கொடுத்த தகவலின் அடிப்படையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் போலீசார் அவர்களை தடுத்து விசாரனைக்காக திருவண்ணாமலை மாநகர காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்ததுடன் மாநகர போலீசார் மாமிச உணவு சாப்பிட்ட தம்பதியிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அண்ணாமலையார்  திருக்கோவிலில் கடந்த சில மாதங்களாக ஆந்திரா தெலுங்கானா கர்நாடகா கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருகை அதிகரித்து வரும் நிலையில் கணவன் மனைவி ஆகிய இருவரும் முட்டை பிரியாணி வாங்கி திருக்கோவிலுக்குள் சாப்பிட்டது ஆன்மீக பக்தர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் இன்று திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் அதிகாலை நடை திறக்கப்பட்டு கருவறையிலன் முன்பு சூரிய பகவான் அருகே புனித கலசங்கள் வைக்கப்பட்டு ஸ்தபன பூஜை செய்யப்பட்டது. திருக்கோவில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க ஸ்தபன பூஜை நிறைவடைந்த உடன் புனித நீர் திருக்கோவிலில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலை அம்மனுக்கு புனித நீர் ஊற்றி சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து திருக்கோவிலில் உள்ள ராஜகோபுரம் பெரிய நந்தி உள்ளிட்ட அனைத்து சன்னதிகளிலும் புனித நீர் தெளிக்கப்பட்டு பிராயசித்த பூஜை செய்யப்பட்டது.