ஒரே சேலையில் தம்பதி தூக்கிட்டு தற்கொலை

 
suicide

பெரம்பலூர் அருகே  கணவன், மனைவியுடன் ஒரே சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Can you predict death? - Telegraph India

பெரம்பலூர் மாவட்டம் லாடபுரம் கிராமத்தை சேர்ந்த வயதான தம்பதிகள் தியாகராஜன் (78) மற்றும் பானுமதி (72), இவர்களுக்கு கதிரேசன் மற்றும் கவிதா என்ற மகனும் மகளும் உள்ளனர். மகன் கதிரேசன் விழுப்புரம் மாவட்டத்தில் சோடா கம்பெனி நடத்திக் கொண்டு குடும்பத்துடன் தனியே வசித்து வரும் நிலையில் இவர்களது மகள் கவிதாவை அரும்பாவூர் அருகே அ.மேட்டூரை சேர்ந்தவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர். மகன் மற்றும் மகள் இருவரும் பிரிந்து சென்றபின் தியாகராஜன் லாடபுரத்திலுள்ள தனதுவீட்டின் அருகில் பெட்டிக் கடை ஒன்றை வைத்து பிழைப்பு நடத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் தியாகராஜனின் மனைவி பானுமதிக்கு கர்ப்பபையில் புற்றுநோய் ஏற்பட்டு பல மாதங்களாக அவதிபட்டு வலியால் தினம்தோறும் துடிதுடித்து வந்துள்ளார். மகன், மகள் இருவரும் கைவிட்ட நிலையில், தியாகராஜன் பல இடங்களில் மருத்துவம் பார்த்தும் மனைவியை குணப்படுத்த முடியாது போனதால் மனம் உடைந்து போனார். இந்நிலையில் இன்று காலை இவர்களது வீடு உட்புறம் தாளிடப்பட்ட நிலையில், வெகுநேரம்  திறக்கப்படாதிருந்த நிலையில் அருகில் வசிப்பவர்களும் உறவினர்களும் கதவை திறந்து பார்த்தபோது மின்விசிறியில் ஒரே சேலையில் தியாகராஜனும், பானுமதியும் தம்பதி சகிதமாக தூக்கில் தொங்குவது கண்டு அதிர்ச்சியுற்று காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பெரம்பலூர் போலீஸார் இறந்தவர்களின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வயதான காலத்தில் பிள்ளைகள் கைவிட்ட நிலையில் பாசத்துடன் நேசித்த மனைவி புற்றுநோய் வசப்பட்டு வலியால் துடிப்பதை கண்டதியாகராஜன் அவரது வேதனையை தீர்க்க வழியின்றி செய்வதறியாது . மனைவியுடன்சேர்ந்து உயிர்விட முடிவு எடுத்து இந்த தற்கொலையை அரங்கேறி இருப்பது போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.