வாக்கு எண்ணிக்கை- தேர்தல் ஆணையரிடம் பாஜக வலியுறுத்தல்

 
nirmala sitharaman

வாக்கு எண்ணிக்கையின்போது பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் தேர்தல் ஆணையரிடம் பாஜக வலியுறுத்தியுள்ளது.

nirmala

மக்களவைத் தேர்தல் ஏழாம்  கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இன்று  இறுதி கட்ட கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. ஜூன் நான்காம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் இந்திய அளவில் பாஜக கூட்டணி 350-க்கும் மேற்பட்ட இடங்களை பிடிக்கும் என்றும், தமிழகத்தை பொறுத்தவரை திமுக கூட்டணி வெற்றி பெறும் என்றும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான பாஜக குழுவினர் தேர்தல் ஆணையரிடம் நேரில் சென்று, வாக்கு எண்ணிக்கையின்போது பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். தேர்தல் நடைமுறைகளை சிறுமைப்படுத்தும் முயற்சிகளுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.