கள்ளச்சாராயம்: உயிரிழப்பு எண்ணிக்கை 13ஆக உயர்வு!

 
tn

கள்ளச்சாராயம் குடித்ததால் விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ராஜவேல் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

death
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் வம்பாமேடு பகுதியில்  விற்பனை செய்யப்பட்ட கள்ளச்சாராயத்தை   எக்கியார் குப்பம் மீனவர்கள் அருந்திய நிலையில் 20ற்கும் மேற்பட்டோர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். நேற்று முன்தினம் வரை 6 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், உயிரிழந்தவர்கள் உடலுக்கு அமைச்சர்கள் பொன்முடி,  செஞ்சி மஸ்தான் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.  இதை தொடர்ந்து  விஜயன், சங்கர், சரத்குமார் உள்ளிட்ட 5 பேர் அடுத்தடுத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 11 ஆக அதிகரித்தது. அத்துடன் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஆபிரகாம் என்பவர் நேற்று இரவு பலியானார்.
 

Death

இந்நிலையில் மரக்காணத்தில் கள்ளச்சாராயம் குடித்ததால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராஜவேல் என்கின்ற 38 வயது நபர் இன்று உயிரிழந்துள்ளார்.