கள்ளச்சாராய பலி எண்ணிக்கை 64 ஆக உயர்வு

 
கள்ளக்குறிச்சி விஷச்சாராயம்- பலி எண்ணிக்கை 18ஆக உயர்வு கள்ளக்குறிச்சி விஷச்சாராயம்- பலி எண்ணிக்கை 18ஆக உயர்வு

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 64 ஆக உயர்ந்துள்ளது.

Image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கருணாபுரம் கிராமத்தில் கள்ளச்சாராயம் அருந்தி 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே கருணாபுரம் கள்ளச்சாரய உயிரிழப்பு சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும் வகையில் தமிழக அரசால் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டு, அதன் தலைவராக உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்தாஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவர் கருணாபுரம் பகுதிக்கு நேரடியாக சென்று மெத்தனால் அருந்தி உயிரிழந்த நபர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். விஷச் சாராய விவகாரத்தில் இதுவரை 12 பேரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்துள்ளனர். 

கள்ளச்சாராயம்

இந்நிலையில் கள்ளக்குறிச்சி கருணாபுரம் கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 64- ஆக அதிகரித்துள்ளது. புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மகேஷ் என்பவர் உயிரிழந்தார். இதனிடையே கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களில் இதுவரை 118 பேர் உடல் நலம் தேறி வீடு திரும்பியுள்ளதாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. 229 பேர் அனுமதிக்கப்பட்ட நிலையில் 63 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். தற்போது 48 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.