புதுச்சேரியில் வரும் 5-ம் தேதி மருத்துவ படிப்புக்கு கலந்தாய்வு தொடங்குகிறது

 
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

வாடிக்கையாளர்கள் வாங்கும் அனைத்து பொருட்கள் மற்றும் சேவைகளுக்கும் ஜிஎஸ்டி பில்களைக் கேட்டு பெறுவதை ஊக்குவிக்கும் வகையில், புதுச்சேரியில் ‘எனது பில் எனது உரிமை’ எனும் பரிசு திட்டத்தை முதல்வர் ரங்கசாமி தொடக்கி வைத்தார். 

ரங்கசாமி

இந்த பரிசு திட்டம் மத்திய அரசு மற்றும் புதுச்சேரி அரசின் ஒருங்கிணைப்புடன்  செயல்படுத்தப்படுகிறது. ‘எனது பில் எனது உரிமை' பரிசு திட்டத்தில் புதுச்சேரியில் பொருட்கள் மற்றும் சேவைகளை வாங்கும் இந்தியாவின் குடிமகன் எவர் வேண்டுமென்றாலும் பங்குபெறலாம். அதிகபட்சம் 25 பில்களை பதிவேற்றம் செய்யலாம். பரிசு திட்டத்தில் பங்கேற்பு, வழங்கப்படும் ரொக்கப் பரிசு, தகுதி மற்றும் திட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டதால், முதலில் மொபைல் செயலி அல்லது வலைத்தளத்தில் தங்களை பற்றிய சில விபரங்களை முறை மட்டும் பதிவு செய்து கொள்ளவேண்டும். 

மொபைல் செயலியை கூகிள் பிலே ஸ்டோர் (Google play store) அல்லது ஆப்பிள் ஸ்டோர் (Apple store) மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இத்திட்டம் புதுச்சேரி சட்டப்பேரவையிலுள்ள முதலமைச்சர்  அலுவலகத்தில் நடைபெற்றது. இத்திட்டத்தை தொடங்கிவைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ரங்கசாமி, “புதுச்சேரியில் மருத்துவ படிப்புக்கு, அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு கோப்பு, ஒன்றிய அரசிடம் உள்ளது. விரைவில் ஒப்புதல்  கிடைக்கும் என்று நம்பிக்கை இருக்கிறது. அதன்படி புதுச்சேரியில் வருகிற 5-ந்தேதி மருத்துவ படிப்புக்கு கலந்தாய்வு தொடங்குகிறது. அரசு பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு கிடைக்காத பட்சத்தில், பழைய நிலையை தொடரும்” என்றார்.