நாங்களும் ஃபோட்டோ மாட்டுவோம்.. ஸ்டாலின், இபிஎஸ், காமராஜர் புகைப்படத்துடன் கவுன்சிலர்கள் வாக்குவாதம்
கரூர் மாநகராட்சி கூட்டரங்கத்தின் சுவரில் முதலமைச்சர் விஜய் புகைப்படம் மாட்டப்பட்டிருந்த நிலையில் முன்னாள் முதலமைச்சர்கள் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, காமராஜர் புகைப்படம் இடம்பெற வேண்டும் என அந்தந்த கட்சிகளின் கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
![]()
கரூர் மாநகராட்சி அலுவலக கூட்டரங்கில் இன்று மாதாந்திர ஆலோசனைக் கூட்டம் மேயர் மற்றும் ஆணையர் முன்னிலையில் நடைபெற்றது. அதில் மண்டல குழு தலைவர்கள் மற்றும் அனைத்து வார்டு கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர். கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, கூட்டரங்கின் சுவரில் தற்போதைய முதலமைச்சர் ஜோசப் விஜயின் புகைப்படம் மாட்டி வைக்கப்பட்டிருந்தது. இதைப் பார்த்த திமுக கவுன்சிலர் சக்திவேல், திடீரென எழுந்து சென்று, அங்கு வைக்கப்பட்டிருந்த முதலமைச்சர் ஜோசப் விஜய் புகைப்படத்தின் அருகே, முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் புகைப்படத்தை மாட்டினார்.உடனே எடப்பாடி பழனிசாமியின் புகைப்படத்தை மாட்டுவோம் எனக்கூறி அதிமுக கவுன்சிலர்கள் ஃபோட்டோவை எடுத்து வந்தனர். தே போன்று காங்கிரஸ் கவுன்சிலர்கள், முன்னாள் முதலமைச்சர் காமராஜர் படத்தை வைக்க வேண்டும் என புகைப்படத்தை எடுத்து வந்து குரல் எழுப்பினர். ஒவ்வொரு கவுன்சிலர்களும் தங்களது தலைவர்களின் புகைப்படங்களை மாட்டுமாறு கூறியதால் கூட்ட அரங்கில் சலசலப்பு ஏற்பட்டது.

