விரைவில் செலவு குறைப்பு நடவடிக்கை- அவசியமில்லா அரசு பணியிடங்கள் ரத்து
செலவு குறைப்பு நட வடிக்கையாக, அனைத்து துறைகளிலும் உயரதிகாரிகளின் பதவிகளை குறைப்பது, அவசியமில்லாத பணியிடங்கள் ரத்து உள்ளிட்ட சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
தமிழக அரசின் மொத்த கடன், 10 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. சொந்த வரி வருவாய், வரி அல்லாத வருவாய், மத்திய அரசின் மானியங்கள் போன்றவை வாயிலாக, அரசுக்கு வருவாய் கிடைக்கிறது. நடப்பு நிதியாண்டில் மொத்த வருவாயாக, 3.50 லட்சம் கோடி ரூபாய் கிடைக்கும் எனவும், மொத்த செலவு, 4.05 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் எனவும் மதிப்பிடப்பட்டு உள்ளது. இதில் பணியாளர்களுக்கான சம்பள செலவு, 77,310 கோடி ரூபாயும், கடன்களுக்கான வட்டியின் பங்கு, 76,452 கோடி ரூபாயாகவும், மானியங்கள் பங்கு, 1.72 லட்சம் கோடி ரூபாயாகவும் இருக்கும் என, கணக்கிடப்பட்டுள்ளது.
த.வெ.க., ஆட்சி அமைந்த நிலையில், 500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தும் வீடுகளுக்கு, 200 யூனிட் இலவச மின்சாரம், தாய்மாமன் தங்க மோதிர திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளன. மகளிருக்கு ஆண்டுக்கு, 3 இலவச சிலிண்டர்வழங்கும் திட்டம், பொங்கல் முதல் தொடங்கப்பட உள்ளது. மகளிருக்கு மாதம், 2,500 ரூபாய் வழங்கப்பட உள்ளதாக, அக்கட்சி தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளது. இவற்றுக்காக அரசுக்கு அதிக நிதி தேவைப் படுகிறது. எனவே, அதிகரிக்க, கடைகளில் வருவாயை 'டாஸ்மாக்' மது விற் பனை, கனிமங்கள் விற்பனையில் முறைகேடு தடுப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. செலவு குறைப்பு நடவடிக்கையாக, கடந்த ஆட்சியில் அறிவிக்கப்பட்ட, பல திட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதில், மற்றொரு அம்சமாக, அனைத்து துறை களும் சீரமைக்கப்பட உள்ளன. அதன்படி, ஒவ் வொரு துறையிலும் அதிகளவில் உள்ள உயரதிகாரிகளின் பணியிடங்களை குறைப்பது, அவசியம் இல்லாத பணியிடங்கள் ரத்து உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன. வணிக வரி துறையில் கூடுதல் ஆணையர்கள், இணை ஆணையர்கள் பணியிடங்களை குறைக்க, அரசு முடிவு செய்துள்ளது. இதேபோல், பல துறைகளில் பணியிடங்களில் அவசியம், அவசியமில்லாத விபரங்கள் கணக்கெடுக்கப்பட்டு வருகின்றன.

