அலுவலகங்களில் முதலமைச்சர் படம் அமைத்ததில் ஊழல் புகார் - விசாரணை நடத்த உத்தரவு
Updated: Aug 25, 2026, 21:16 IST1787672791221
திண்டுக்கல் மாவட்டத்தில் கூட்டுறவு சங்க அலுவலகங்களில் முதல்வர் படம் பொருத்துவதில் ஊழல் என புகார் எழுந்துள்ளது.

அரசு அலுவலகங்களில் தமிழ்நாடு முதல்வர் விஜய் படம் வைக்க உத்தரவிடப்பட்டிருந்ததை அடுத்து, தமிழ்நாட்டில் உள்ள அரசு அலுவலகங்கள், பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் இதர அலுவலக கட்டடங்களில் முதல்வர் விஜய் புகைப்படம் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் கூட்டுறவு சங்க அலுவலகங்களில் முதல்வர் படம் பொருத்துவதில் ஊழல் என புகார் எழுந்துள்ளது. ரூ.800க்கு முதல்வர் விஜய் புகைப்படத்தை வாங்கியது குறித்து விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஆணையிட்டுள்ளது. கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் அந்தஸ்த்தில் அதிகாரிகளை நியமித்து விசாரிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

