அமமுக துணைப் பொதுச் செயலாளர் பழனியப்பனுக்கு கொரோனா ?
Sep 30, 2020, 15:22 IST1601459545000
அமமுக துணைப் பொதுச் செயலாளர் பழனியப்பனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் எம்பிக்கள், எம்எல்ஏக்கள் என பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அந்த வகையில் முன்னாள் அமைச்சரும், அமமுக துணைப் பொதுச் செயலாளருமான பழனியப்பனுக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, மருத்துவர்கள் அறிவுறுத்தலின்படி வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார் என்றும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
செப்டம்பர் 28ஆம் தேதி ராயபேட்டையில், அமமுக தலைமை அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை கூட்டத்தில் பழனியப்பன் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.