உயர்நீதிமன்றத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட பாதுகாப்பு படைவீரர்கள் 8 பேருக்கு கொரோனா!

உயர்நீதிமன்றத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட பாதுகாப்பு படைவீரர்கள் 8 பேருக்கு கொரோனா!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வரும் நிலையில், சென்னையில் தான் அதிக அளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் அதிர்ச்சியளிப்பது என்னவென்றால், கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவலர்கள் உள்ளிட்ட முன்கள பணியாளர்களுக்கு அதிகளவில் தொற்று ஏற்பட்டுள்ளது. அவர்களில் சிலர் உயிரிழந்தும் உள்ளனர்.

உயர்நீதிமன்றத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட பாதுகாப்பு படைவீரர்கள் 8 பேருக்கு கொரோனா!

இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள மத்திய தொழிலக பாதுகாப்பு படையை சேர்ந்த 8 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிபடுத்தப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் ராஜீவ் காந்தி மருத்துவமனை, ஐஐடி வளாகம், தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனை ஆகியவற்றில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.