பெங்களூரு மருத்துவமனையிலிருந்து கொரோனா நோயாளி தப்பியோட்டம்

 
corona patient

கொரோனா பாதிப்பு உள்ளான நபர் பெங்களூரு நகர் அருகே மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Long-term follow-up of recovered patients with COVID-19 - The Lancet

பெங்களூரு வசந்த் நகர் பகுதியை சேர்ந்த ஆதித்யா வீர்வானி (வயது 28), என்ற நபர் வெளிநாட்டிற்கு சென்று விட்டு கடந்த மூன்றாம் தேதி பெங்களூரு சர்வதேச விமான நிலையத்திற்கு திரும்பினார். அப்போது அவரை, பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியானது. 

இதையடுத்து பெங்களூரு ஊரகம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவரை அனுமதித்த அதிகாரிகள், சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் நேற்று காலை 11 மணி அளவில், ஆதித்யா மருத்துவமனையிலிருந்து யாருக்கும் தெரிவிக்காமல் தப்பி ஓடியுள்ளார். பல மணி நேரம் தேடியும், அவர் கிடைக்காத காரணத்தினாலும் அவரது மொபைல் அணைத்து வைக்கப்பட்டு இருந்த காரணத்தினாலும் தனியார் மருத்துவமனை சார்பில் தொட்பலாபூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஆதித்யாவை தேடி வருகின்றனர்.