2 நாட்கள் மட்டுமே சட்ட பேரவை கூட்டத்தொடர் - முழு விவரம் உள்ளே!!

 
tn

ஆளுநர் உரையின் மீதான முதல்வரின் பதிலுரை நேரலை செய்யப்படும் என்று பேரவைத் தலைவர் அப்பாவு அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இதில் மேகதாது அணை கட்ட கர்நாடகாவை ஒன்றிய அரசு அனுமதிக்கக் கூடாது , நீட் உள்ளிட்ட நுழைவு தேர்வுகள் வேண்டாம் என்பதில் தமிழ்நாடு அரசு உறுதி  போன்ற முக்கிய அம்சங்கள் இடம் பெற்றிருந்தன. இதை தொடர்ந்து ஆளுநர் உரை நிறைவுக்கு பிறகு அலுவல் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டு அதில் கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என சபாநாயகர் அப்பாவு தலைமையில் ஆலோசிக்கப்பட்டது. 

ttn

இந்நிலையில் கொரோனா தொற்று எதிரொலியாக 2 நாட்கள் மட்டுமே பேரவை கூட்டத்தொடர் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை நிகழ்ச்சி நிரலின் படி நாளை சட்டமன்ற பேரவை முன்னாள் உறுப்பினர்கள் மறைவு குறித்து இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படும். அதாவது பேரவைத்தலைவர் அப்பாவு  தீர்மானங்களை பேரவை முன் வைப்பார். அதில்,  தமிழ்நாடு முன்னாள் ஆளுநர் ரோசையா மறைவு குறித்தும்  ,இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி குரூப் கேப்டன் வருண் சிங் மற்றும் 11 ராணுவ உயர் அலுவலர்கள் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தது குறித்தும்  ,  தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் துரைமாணிக்கம் மறைவு குறித்தும்,   கன்னட திரைப்பட நடிகர் புனித் ராஜ்குமார் மறைவு குறித்தும்,   மனித உரிமை செயற்பாட்டாளர் பேராயர் டெஸ்மன்ட்  டுட்டு மறைவு குறித்தும்  இரங்கல் தீர்மானம் வாசிக்கப்படும்.

stalin

இதையடுத்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் முன்மொழிய பெற்று விவாதம் தொடங்கப்படும். அதேபோல் வருகிற 7ஆம் தேதி 2021 -22 ஆம் ஆண்டில் கூடுதல் செலவிற்கான முதல் துணை நிதிநிலை அறிக்கை பேரவைக்கு அளித்தல் ,ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் 2021 22 ஆம் ஆண்டின் கூடுதல் செலவினத்திற்காக முதல் துணை நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்படும் மானிய கோரிக்கைகள் மீது வாக்கெடுப்பு விவாதம் மற்ற வாக்கெடுப்பு , 2021-22 ஆம் ஆண்டில் கூடுதல் செலவிற்கான முதல் துணை நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்படும் மானிய கோரிக்கைகள் குறித்து நிதி ஒதுக்க சட்ட முன்வடிவு அறிமுகம் செய்தல் ஆய்வு செய்தல் மற்றும் நிறைவேற்றுதல் , அவசர சட்டங்கள் தொடர்பான சட்ட முன் வடிவுகள் மற்றும் பிற சட்ட முன் வடிவுகள் அறிமுகம் செய்தல், ஆய்வு செய்தல் மற்றும் நிறைவேற்றுதல், அரசினர் அலுவல்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.  அதேபோல் பேரவை வழக்கம்போல நாளை காலை 10 மணிக்கு கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.