மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலுக்கு வந்த 35 பேருக்கு கொரோனா

 
temple

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலுக்கு வரும் பக்தர்களை கண்காணிக்க கோவில் நிர்வாகம் தனிக்குழு அமைத்து கண்காணிக்க வேண்டும், பக்தர்களுக்கு கொரானா அறிகுறிகள் தெரிந்தால் உடனடியாக அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

மேல்மருவத்தூர் சித்தர் பீடத்தை ஆய்வுசெய்யக் கூடாது!'- அதிகாரிகள்- கோயில்  நிர்வாகம் வாக்குவாதம் | Melmaruvathur Temple problem

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலுக்கு கர்நாடகாவில் இருந்து வருகை தந்த 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து இன்று மேல்மருவத்தூர் கோயிலுக்கு சென்ற மாவட்ட ஆட்சியர்  ராகுல் நாத் நேரில் ஆய்வு நடத்தினார். அங்கு மருத்துவக் குழுவிடம் கோவிலுக்கு வரும் பக்தர்களை தனியாகக் கண்காணிக்க ஒரு குழு அமைக்க வேண்டும் அரசு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் முக கவசம் சமூக இடைவெளி போன்றவை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

மேல்மருவத்தூர் கோயிலில் உள்ள ஊழியர்கள், பாதுகாப்பு பணியாளர்கள், சிறுகடை வியாபாரிகள் ஆகியோருக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய என உத்தரவிட்டுள்ளார்