ஆரணியில் 9ம் வகுப்பு படிக்கும் 3 மாணவர்களுக்கு கொரோனா

 
corona

ஆரணியில் 9ம் வகுப்பு படிக்கும் 3 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பள்ளி இரண்டு நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Record 2,602 new corona patients in Andhra; active cases 19,814 | Zee  Business
 
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் பகுதியில் உள்ள சுப்பிரமணிய சாஸ்திரியார் அரசு நிதி உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி இங்கு இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் மாணவ, மாணவிகள் சுமார் 5000க்கும் மேற்பட்டோர் பயின்று வருகின்றனர். சுமார் 200க்கும் மேற்பட்ட ஆசிரிய ஆசிரியைகள் பணி செய்து வருகின்றனர். தற்பொழுது தமிழகம் முழுவதும் ஓமைக்ரான் மற்றும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் தமிழக அரசு 1-8வகுப்பு வரை நேரடி வகுப்புகளுக்கு தடை விதித்துள்ளது. ஆனால் 9, 10 மற்றும் 11, 12-ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகள் சுழற்சி முறையில் பள்ளிக்கு வர தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது

இதையடுத்து ஆரணி சுப்பிரமணிய சாஸ்திரியார் மேல்நிலைப்பள்ளியில் 9,10 மற்றும் 11,12-ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகள் சுழற்சி முறையில் வகுப்புகள் பயந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று 9-ம் வகுப்பு படிக்கும் 150 மாணவ மாணவிகளுக்கு கொரோனா பரிசோதனை பள்ளியிலேயே எடுக்கப்பட்டுள்ளது. இன்றைய பரிசோதனையின் முடிவில் 9-ம் வகுப்பு படிக்கும் 3 மாணவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பள்ளி தலைமையாசிரியர் 9, 10,11,12 ஆகிய பள்ளி மாணவ, மாணவிகளை உடனடியாக 2 நாட்கள் விடுமுறை அளித்து அனுப்பி வைத்தனர்.