சென்னை பல்லாவரம் காவல் நிலையத்தில் 12 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி!!

 
corona

சென்னை பல்லாவரம் காவல் நிலையத்தில் 12 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்று பரவல் அதிகமாகி கொண்டே செல்கிறது.  இதனால் தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதேசமயம் தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியும் துரிதமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் தொற்று தினசரி பாதிப்பு எண்ணிக்கை 15ஆயிரத்தை கடந்துள்ளது. 

corona

நேற்று ஒரேநாளில் 15,379 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 27 லட்சத்து 17 ஆயிரத்து 686 ஆக அதிகரித்துள்ளது. நேற்று 20 பேர் உயிரிழந்த நிலையில், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 36 ஆயிரத்து 886  ஆக அதிகரித்துள்ளது. கல்லூரிகள், மாணவர் விடுதி, பல்கலை., வணிக நிறுவனங்கள் ஆகியவற்றில் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடி வருகிறது. 

corona update

இந்நிலையில் சென்னை, பல்லாவரம் காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் உட்பட 12 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் காவல்நிலையம் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டுள்ளது. காவல்நிலையத்தில் 12 பேருக்கு தோற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.