கொரோனா உயிரிழப்பு - நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்ட தமிழக அரசு!!

 
corona death

கொரோனாவால்  உயிரிழந்தோருக்கான நிவாரண உதவியை வழங்க நிதி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் நேற்று ஒரேநாளில்  2,731 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 27 லட்சத்து 55 ஆயிரத்து 587 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் நேற்று ஒரேநாளில் 9 பேர் பலியான நிலையில், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 36 ஆயிரத்து 805 ஆக அதிகரித்துள்ளது.

corona patient

 கொரோனாவால் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ரூ.50 ஆயிரம் அளிக்க தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி கடந்த டிசம்பர் மாதம் 8ஆம் தேதி கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 50 ஆயிரம் வழங்கும் திட்டத்தை முதல்வர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

corona death

இந்நிலையில் கொரோனாவால் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்க ரூபாய் 182 கோடி வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் கொரோனா நோய் தொற்றினால் இருந்ததற்கான இறப்பு சான்றிதழ் வைத்திருந்தால் அதை https://www.tn.gov.in  என்ற இணையதளத்தில் வழியாக பதிவிட்டு அல்லது இ-சேவை மூலமாக நிவாரணத் தொகையை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது