கோ-ஆப்டெக்ஸில் தீபாவளிக்கு 30% சிறப்பு தள்ளுபடி..!

 
1

தீபாவளி சிறப்பு விற்பனைக்காக, கைத்தறி ரகங்களுக்கு கோ-ஆப்டெக்ஸ் அனைத்து விற்பனை நிலையங்களிலும் 30% அரசு சிறப்பு தள்ளுபடி வழங்குகிறது.இங்கு பழசுக்கு புதுசு திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்கள் தங்கள் பழைய / கிழிந்த நிலையிலுள்ள ஒரிஜினல் ஜரிகை உள்ள பட்டுப் புடவைகளை கொடுத்துவிட்டு புதிய பட்டுப் புடவைகளை பெற்றுக் கொள்ளலாம்.

கோவை மென்பட்டு, ஆரணி, சேலம், திருபுவனம் பட்டுப்புடவைகள், கோரா காட்டன், லினன் மற்றும் பருத்திச் சேலைகள் போன்ற பல்வேறு ரகங்கள் விற்பனைக்கு வந்துள்ளன. போர்வைகள், படுக்கை விரிப்புகள், வேஷ்டிகள், லுங்கிகள், சட்டைகள் எனப் பலவிதமான பொருட்களும் கிடைக்கின்றன.

விற்பனை இலக்குகடந்த ஆண்டு தீபாவளியில் ரூ.1 கோடியே 60 லட்சத்து 35 ஆயிரம் விற்பனை செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டு ரூ.2 கோடியே 30 லட்சம் விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.மேலும், கோ-ஆப்டெக்ஸ் மாதாந்திர சேமிப்புத் திட்டத்தின் மூலம், வாடிக்கையாளர்கள் 11 மாத தவணை செலுத்தி, 12-வது மாத தவணையை கோ-ஆப்டெக்ஸ் மூலம் பெற்று, 30% தள்ளுபடியில் துணிகளை வாங்கலாம். ஆன்லைன் விற்பனைக்கும் www.cooptex.gov.in என்ற இணையதளம் உள்ளது.‌