“what bro, its very wrong bro... நான் குல்லா போடுற ஆள் இல்லங்க”- விஜய்யை கலாய்த்த கூல் சுரேஷ்

 
s

என் பெயரிலேயே கட்சியை ஆரம்பித்துள்ளேன். என் கட்சியுடன் கூட்டணி வைக்க விருப்பம் உள்ளவர்கள் வரலாம். இல்லை என்றால் நான் தனித்து போட்டியிடுவேன் என நடிகர் கூல் சுரேஷ் கூறியுள்ளார்.

இயக்குனர் லாவண்யா இயக்கத்தில் உருவான பேய் கொட்டு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சி சென்னை வடபழனியில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த திரைப்படத்தின் பெண் இயக்குனர் லாவண்யா திரைப்படத்திற்கு தேவையான 32 பணிகளையும் ஒரே ஆளாய் செய்துள்ள நிலையில் இதற்காக அவர் 10க்கும் மேற்பட்ட விருதுகளை அவர் பெற்றுள்ளார். இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் பேரரசு, நடிகர் கூல் சுரேஷ் ஜாகுவார் தங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


நிகழ்ச்சியில் பேசிய நடிகர் கூல் சுரேஷ், காஞ்சிபுரம்னா பட்டு இந்த படம் பேய் கொட்டு..சாப்பிட தேவை தட்டு இந்த படம் பேய் கொட்டு..சகலகலா வல்லவன் என்றால் டி.ராஜேந்தர்...சகலகலா வள்ளி என்றால் லாவண்யா.விருது வாங்குவதற்கு திறமை தேவை இல்லை.. பரிந்துரை இருந்தால் மட்டுமே போதும்.மக்களுக்கு சேவை செய்வதற்காகவே என்னுடைய பெயரிலேயே கட்சியை ஆரம்பித்து உள்ளேன்.என்னுடைய கூட்டணி வைக்க விருப்பம் உள்ளவர்கள் வரலாம்..இல்லை என்றால் நான் தனித்து போட்டியிடுவேன். நான் குல்லா போடுற ஆல் இல்லங்க! மற்றவர்களை போல காசு கொடுத்து,பிரியாணி கொடுத்து கூட்டத்தை கூட்ட மாட்டேன்..வாட் ப்ரோ.. இட்ஸ் வெரி ராங் ப்ரோ..” என தவெக தலைவர் விஜய்யை கூல் சுரேஷ் வம்பிழுத்தார்.