சமையல் எண்ணெய் விலை கிடுகிடுவென உயர்வு! இல்லத்தரசிகள் அதிர்ச்சி

 
oil

வளைகுடா நாடுகளில் போர்பதற்றத்தினால் கப்பல் போக்குவரத்து தடைபட்டுள்ள நிலையில் சமையல் எண்ணெய் விலை அதிகரித்துள்ளது.

oil

ஈரோட்டில் கடந்த வாரம் 134 ரூபாயாக இருந்த 1 கிலோ பாமாயில் 145 ரூபாயாகவும், சன்ப்ளவர் ஆயில்- கிலோ 160 ரூபாயில் இருந்து 172 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. ரைஸ் ப்ரேன் ஆயில்- 130 ரூபாயில் இருந்து 142 ரூபாயாக உயர்ந்துள்ளது. மேலும், வரத்து இல்லாததால் 30%-40% அளவிற்கு எண்ணெய் உற்பத்தியும் விற்பனையும் பாதிக்கப்படடுள்ளதாக எண்ணெய் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். வெளி நாடுகளில் இருந்து கிடைக்கும் எண்ணெய் வகைகள் கிலோவிற்கு 12 ரூபாய் அளவிற்கு கூடுதலாகி உள்ள நிலையில், உள்ளூர் உற்பத்தி செய்யப்படும் கடலை எண்ணெய் கிலோவிற்கு 5 ரூபாய் உயர்ந்துள்ளது.

கடலை எண்ணெய், கடந்த வாரம் 15 கிலோ கொண்ட டின் ஒன்று 2900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று 3100 ரூபாயாக உயர்ந்துள்ளது. ஈரான் போரை காரணம் காட்டி சிலர்  மொத்தமாக எண்ணெய் பதுக்களில் ஈடுபடுவதும் விலையேற்றத்திற்கு காரணமாக கூறப்படுகிறது. போர்ச்சூழல் தணிந்து கப்பல் போக்குவரத்து சீரடைந்தால் மட்டுமே எண்ணெய் விற்பனை சீரடையும் என வணிகர்கள் தெரிவித்தனர்.